Wednesday, 26 November 2014

போலி மின்னஞ்சலை கண்டுபிடிப்பது எப்படி ?



நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் அஞ்சல்களை நாம் அடிக்கடி பெறலாம்.


இப்போதெல்லாம், இது போன்ற ஸ்கேம் மெயில்களை வடிகட்டி, ஸ்கேம் மெயில் போல்டருக்கு அனுப்பும் தொழில் நுட்பத்தை கூகுள் போன்ற மின் அஞ்சல் தளங்கள் பயன்படுத்தி வருகின்றன. இருப்பினும், சில அஞ்சல்கள், இவற்றின் பிடியில் சிக்காமல், நம்மை வீழ்த்தப் பார்க்கின்றன. அப்படிப்பட்ட ஓர் அஞ்சலைப் பெற்றால், சந்தேகம் ஏற்பட்டால், என்ன செய்வது?



இந்த வகையில் நமக்கு உதவ ஓர் இணைய தளம் இயங்குகிறது. வந்திருக்கும் அஞ்சலில் உள்ள சில சொற்களை, இந்த தளத்திற்கு அனுப்பினால், அது சோதனை செய்யப்பட்டு, நமக்கு அது ஸ்கேம் வகை அஞ்சலா அல்லது வழக்கமான அஞ்சலா என்று தெரிவிக்கிறது. இந்த தளத்தின் இணைய முகவரி  jasonmorrison.net


இந்த தளமானது கூகுளின் தேடல் இஞ்சின் ஒன்றைப் பயன்படுத்துகிறது. இந்த தேடல் இஞ்சின், ஏற்கனவே ஸ்கேம் மற்றும் திருட்டு முயற்சிகளுக்கு எதிராக வடிவமைக்கப்பட்டுள்ளது. அரசின் தளங்கள் மற்றும் சில குழு தகவல் தளங்களின் உதவியுடன், வந்திருப்பது ஸ்கேம் மெயிலா எனக் கண்டறிகிறது. இந்த தளத்தை அடைந்தவுடன், தேடல் கட்டத்தின் கீழாக உள்ள LEARN MORE என்ற லிங்க்கில் கிளிக் செய்து, கிடைக்கும் தகவல்களைப் பாருங்கள். இந்த தளம் ஏற்பட்டதன் நோக்கம் என்ன, என்ன வகையில் உங்களுக்கு உதவுகிறது என்ற தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.



எனக்கு வந்த மெயில் ஒன்றில், ரொஸட்டா என்ற பெயரில் விலை உயர்ந்த மரகதக் கல் ஒன்று குறைந்த விலைக்குக் கிடைப்பதாக தகவல் இருந்தது. அப்படியே அதன் முக்கிய சொற்களைக் காப்பி செய்து, இந்த தளத்தில் போட்டு கிளிக் செய்த போது, சில விநாடிகளில் தகவகள் கிடைத்தன. இது போன்ற ஸ்கேம் மெயில்கள் எங்கெல்லாம் அனுப்பப் பட்டுள்ளன என்ற தகவலும் கிடைத்தது. இனி, எந்த சந்தேகம் தரும் மெயில் வந்தாலும், அதனை இந்த தளத்தின் உதவியுடன் சோதனை செய்து, அதன் உண்மைத் தன்மையினை அறிந்து கொள்ளுங்கள்.

பென்டிரைவ் வைத்து உள்ளிர்களா ?




பென்டிரைவ் என்பது கணனி பயன்படுத்துவோர் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்தும் ஒரு REMOVABLE DEVICE ஆகும்.
இத்தகைய பென்டிரைவ்கள்(pendrives) நாம் கணினியில் பயன்படுத்தும்போது சில வேளைகளில் நம்முடைய பொறுமையைச் சோதிக்கும் அளவுக்கு மிகவும் மெதுவாக இயங்கும். அதிலுள்ள தரவுகளை பரிமாற்றம் செய்யும்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும். இத்தகைய சூழ்நிலையைத் தவிர்ப்பது எப்படி?

உங்களுடைய பென்டிரைவ் வேகமாகச் செயல்பட என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம்.

1.உங்கள் கணினியில் பென்டிரைவை இணையுங்கள். (win+E)கொடுத்து MY COMPUTER செல்லவும்.

2.அங்கு பென்டிரைவிற்கான டிரைவை வலது கிளிக் செய்து Properties என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

3.தொடர்ந்து திறக்கும் விண்டோவில் HARDWARE என்னும் டேபை கிளிக் செய்யவும். பிறகு Name என்னும் தலைப்பின் கீழுள்ள உங்கள் பென்டிரைவைத் தேரந்தெடுக்கவும்.

4.பிறகு கீழிருக்கும் Properties என்பதை கிளிக் செய்து Ok கொடுக்கவும்.

5.அடுத்து தோன்றும் விண்டோவில் change settings என்பதை கிளிக் செய்யவும்.

6.அதற்கு அடுத்துத் தோன்றும் பெட்டியில் Policies எனும் டேபிள் கிளிக் செய்து அதன் கீழிருக்கும் Better Performance என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்கவும்.

இப்போது உங்கள் பென்டிரைவ் முன்பைக் காட்டிலும் வேகமாக இயங்கும். இதை நீங்கள் கண்கூடாக காண்பீர்கள். இந்த அனுபவம் எப்படி இருக்கிறது என்பதை கருத்துரையில் சொல்லுங்கள்.

மறக்காமல் ஒவ்வொரு முறையும் பென்டிரைவை கணினியிலிருந்து நீக்கும்போது Safely remove hardware என்பதைக் கிளிக்செய்து பின்பு உங்கள் பென் டிரைவை கணினியிலிருந்து நீக்கவும். இதை ஒரு தொடர் பழக்கமாக மாற்றிக்கொள்ளுங்கள். இதனால் உங்கள் பென்டிரைவ் சேதமடையாமல் நீண்ட காலம் உழைக்கும்…!

கூகுள்(Google) உருவான சுவாரசியக் கதை




கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது. அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு.


அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள். அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.இதன் முதலாளி லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி பன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!)


எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள்.


பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர்.


ஒன்று போட்டு நூறு சைபர்.


எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள்.


 ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரே நிலைத்துவிட்டது.

கனவுகளை நிறைவேற்றித்தரும் இணையதள‌ம்....!




எல்லோருக்கும் கனவுகள் உண்டு.ஆனால் அவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் ஆற்றலோ வாய்ப்போ எல்லோருக்கும் அமைந்துவிடுவதில்லை.


சின்ன கனவோ பெரிய கனவோ அவற்றை நிரைவேற்றித்தர யாராவது உறுதி அளித்து உதவி செய்தால் எப்படி இருக்கும்?அற்புதமாக தான் இருக்கும் ஆனால் அத்தகைய நல்லிதயங்களை எங்கே தேடுவது என்று கேட்கிறீர்களா?


கவலையை விடுங்கள் உங்கள் கனவுகளை நிறைவேற்றித்தரக்கூடிய நல்ல மனிதர்களை கண்டு பிடித்து தரும் இணைய‌தளம் ஒன்று உதயமாகியிருக்கிறது. ஸ்பியின் நாட்டில் குடியேறியுள்ள கொலம்பியா நாட்டைச்சேர்ந்த கட்டிட கலை நிபுணர் ஒருவரால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் உங்கள் கனவுகளை சொல்லுங்கள் அதனை நிறைவேற்றித்தருகிறோம் என்று உத்வேகம் அளிக்கிறது.


அதாவது சமூக வலைப்பின்னல் வகையைச்சேர்ந்த இந்த தள‌த்தில் எவர் ஒருவரும் தங்கள் கனவை குறிப்பிட்டால் சக உறுப்பினர்கள் ஒன்று சேர்ந்து அதனை நிறைவேற்றித்தருகின்றனர்.ஆனால் அதற்கு முன் நாமும் பதிலுக்கு இப்படி முன்று உறுப்பினர்களின் கனவுகள் நிரைவேற உதவுவதாக வாக்கு தர வேண்டும்.


அது தான் இந்த தள‌த்தின் சிற‌ப்பம்சம்.நம்முடைய கணவு மற்றவர்கள் உஅதவியால் உண்மையாவதோடு நாமும் மற்றவர்களின் கனவு பூர்த்தியாக கைகொடுக்கிறோம்.இப்படி சங்கிலித்தொடராக கணவுகள் நிறைவேறிக்கொண்டே இருக்கும். சமூக வலைப்பின்னல் கருத்தாக்கத்தை நன்மை எல்லோருக்கும் நன்மை செய்யும் நோக்கத்தோடு இந்த தளம் உருவாக்கப்பட்டுள்ளது.


லாபாப்பயா என்னும் பெயரில் பிலிப் வேலாகியூஸ் இதனை உருவாக்கியுள்ளார். மனிதர் கொலம்பியாவில் வெற்றிகரமான கட்டிட கலை நிபுணராக திகழ்ந்தவர். ஆனால் ஒரு கட்டத்தில் தொழில் மீது வெறுப்பு வந்திருக்கிறது.அதாவது வீடுகளை வாங்கி வசிக்கும் மக்களின் நலனில் அக்கரை செலுத்தும் வகையில் தனது தொழில் அமையவில்லை என அவர் உணர்ந்திருக்கிறார்.


இதனையடுத்து கொலம்பியாவில் இருந்து ஸ்பெயின் நாட்டில் குடியேறி எல்லோருக்கும் நன்மை பய்க்கும் நோக்கத்தொடு லாப்பபயா இணையதளத்தை நிறுவினார்.


கொலம்பியாவில் அதிகம் காணப்படும் பப்பாளியின் ஆங்கில பெயரிலேயே தளத்தை அமைத்துள்ளார்.பப்பாளி விதைகளை போல இந்த தளம் மூலம் பலரது கணவுகள் நிறைவேறி மேலும் பலரது கணவுகள் நிறைவேற வேண்டும் என்று அவர் கனவு காண்கிறார்.


இப்போது உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு நிலவும் பொது சக மனிதர்கள் கை கொடுத்தால் எதையும் சாதிக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.


உதவி செய்ய வேண்டும் என்பது தொற்று வியாதியைப்போல் இண்டெந்ர்நெட் முலம் பரவ வேண்டும் என்றும் அவர் எதிர்பார்க்கிறார்.தனி மனிதர்களின் கணவுகளை நினைவாக்க வேண்டும் என்ப்தே இந்த முயற்சியின் நோக்கம் என்கிறார் அவர்.


நகரச‌பைகளோடு இணைந்து பெரிய அளவிலான மக்கள் நலத்திட்டங்களுக்கும் கைகொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

http://lapapaya.org/home/